Programming (நிரல் எழுதுதல்) கற்றுக் கொள்வதின் அவசியம்


Introduction(முன்னுரை) :


இன்றைய கணிணி மயமாக்கலில் இரண்டு விதமான பயனாளிகள் உள்ளனர். ஒன்று கணிணி மென்பொருள் உருவாக்குபவர்கள் மற்றொன்று கணிணி மென்பொருள் உபயோகிப்பாளர்கள். நமது நாடு பெரும்பாலும் உபயோகிப்பாளர்களை கொண்டுள்ளது. BPO, KPO, DPO, Call Center முதலானவைகள் இந்த விதங்களில் அடங்கும். மென்பொருள் உருவாக்குபவர்கள் பலபேர் இந்தியர்கள். ஆனால் அவர்கள் வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து அதை செய்கின்றனர். இங்கு அதற்கான சூழல் குறைவாக உள்ளது. அதனால் அதை திறம்பட பயிற்றுவிக்கும் கல்வி நிலையங்களும் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு Programming (நிரல் எழுதுதல்) திறன் அதிகமாக இருக்க வேண்டும்.

Programming(நிரல் எழுதுதல்) :


Programming (நிரல் எழுதுதல்) என்பது நாம் செய்கின்ற வேலையை ஒரு கோர்வைப்படுத்தி கணிணிக்கு அதன் மொழியில் எழுதுக் கொடுப்பது. உதாரணமாக கோட்பாடுகள், சூத்திரம், கணக்கு பார்த்தல், Gaming, வடிவமைத்தல் போன்ற பலவிதமான விஷயங்களுக்கு இது உதவுகிறது. இதில் மென்பொருள் நிரல் எழுதுதல் (software programming) என்பது கணிணிக்கு எழுதுதல். அது மட்டுமல்லாமல் நாம் செய்யும் தினசரி வேலைகளுக்கு நிரல் எழுதுதல் என்பது Robotics துறையை சார்ந்ததாகும். Programming ஆரம்ப கால கட்டத்தில் Single Thread (ஒற்றை கோர்வை) முறையிலே இருந்தது. இது ஆரம்ப கட்ட நிலை ஆகும். இது பள்ளி சிறுவர்களுக்கு குறிப்பாக 8ம், 9ம் வகுப்பு முதல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் நாம் எப்படி தகவல்களை சேமிப்பது, எடுப்பது, அதை உபயோகப்படுத்தி நடைமுறை வாழ்க்கை தேவைகள் (சம்பளக் கணக்கு, வரவு செலவு கணக்கு) முதலானவற்றை நெறி முறைப் படுத்தலாம். இதற்கு BASICA, FORTRAN, C, PASCAL போன்ற ஆரம்ப கட்ட மொழிகளை பயன் படுத்தலாம். இவைகள் பொதுவாக CUI (character user interface) என்ற வகையில் அடங்கும். இப்போதைய காலகட்டத்தில் Multi threaded Programming (ஒரே நேரத்தில் பல கோர்வைகள்) இயங்கும் முறையிலே உள்ளது. இது அதிகமாக இப்போதைய மொழிகளான Visual Basic, C#, Java, Delphi அது தவிர பலவகையான மொழிகள் உபயோகப் படுத்தப் படுகின்றன. இவைகள் அனைத்துமே ஒரே நேரத்தில் பல விதமான, வகையான கோர்வைகளை இயக்குகின்றன. இது உயர்கல்வி (அல்லது 11ம், 12ம் +) வகுப்பு பயில்பவர்கள் ஆரம்பிக்கலாம். இவைகள் பொதுவாக GUI (graphical user interface) என்ற வகையில் அடங்கும்.

Application Uses(பயன் பாடுகள்) :


இப்போதைய காலத்தில் web page, mobile programming, desktop programming ஆகியவற்றை வடிவமைக்க அதிகமாக GUI programming உபயோகப்படுகிறது. இந்த துறைகள் எதிர் காலத்தில் வேலை வாய்ப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்க உள்ளது. இதனால் உருவாக்கப்படும் மென்பொருள்கள் அதிகமாக நிறுவனங்களின் கண்க்குகள், கிட்டங்கி (stocks) புத்தகங்கள், சம்பளப் பட்டுவாடா , கல்வி நிலையங்களிலும், BPO, KPO, Call Center முதலான இடங்களில் பயன் படுகிறது. இதில் மேன்மை பெற அடிப்படையாக CUI programming முதற் படியாக உள்ளது.

Training Methods(பயிற்சி முறைகள்) :


இவைகளை பள்ளி செல்லும் காலத்திலே இருந்து கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் எந்த கால கட்டத்ட்ல்ம் இதை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். இதை தனிவகைப் ப்டுத்தி எந்தெந்த வயதில் எந்த விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை வடிவமைத்து அடுத்த தலை முறையை மேன்மை அடைய வைக்க வேண்டியது கணிணி பயிற்சி மையங்களின் கடமையாகும்.