கணிணி மொழிகள்


முகவுரை


இன்றைய கணிணி தொழில் நுட்பத்தில் பலவிதமான மொழிகள் வழக்கில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சிறப்புகளை பெற்றுள்ளன. முந்தைய காலகட்டத்தில் ஒரு மொழியே பல விதமான தேவைகளை நிறைவேற்றியது. இன்று அது போல் இல்லை. அதற்கான காரணங்களை இங்கு ஆராய்வோம். மொழியின் தேவைகள்

கணிணியை பல விதமான தேவைகளுக்கு பயன் படுத்துகிறோம். அவற்றில் முக்கியமானவை தகவல்களை சேமித்தல், சேமித்த தகவல்களை உபயோகித்து அடுத்த முடிவு எடுத்தல், எடுத்த முடிவுகளை வினியோகித்தல் மற்றும் பரிமாறுதல், செய்திகள் பரிமாற்றம், வானிலை ஆராய்வுகள், தொலை தொடர்பு சேவைகள் என பல வகைப்படும். இது போன்ற ஒவ்வொரு சேவைகளுக்கும் தனி தனியாக மொழிவகைகள் உள்ளன. தகவல் சேமித்தல் சம்பந்தமாக Database Languages (SQL Server, Oracle, MySQL) போன்றவைகள் உள்ளன. சேம்த்த தகவல்களை உபயோகித்து ஆராய்தல் போன்றவற்றிற்கு .Net, Java, c++ போன்ற மொழிகள் உள்ளன. தகவல்களை வினியோகித்தல், விளக்குதல் போன்றவற்றிற்கு HTML, HTML5, JavaScript போன்றவைகள் உள்ளன். இது போன்ற மொழிகளை உபயோகப்படுத்தி நிரல் (Programming) எழுதுவதற்கு பல வகையான IDE (Integrated Development Environment) கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை Visual Studio, Xcode, Eclipse ஆகியவைகள் ஆகும்.

செயலிகள் உருவாக்குதல்:


ஒற்றை அடுக்கு செயலிகள் (single tier):


Application development (செயலிகள் உருவாக்குதல்) ஆரம்ப கால கட்டத்தில் Data entry (தகவல் உள்ளீடு) , Storage (தகவல் சேமிப்பு) ஆகிய இரண்டு நுட்பங்களையும் உள்ளடக்கி ஒரே மொழியினால் நிரல் எழுதப்பட்டது. அதாவது BASIC, PASCAL, C++,FOXPRO போன்றவைகள் அனைத்து நுட்பங்களையும் செய்ய வைக்குமாறு எழுதப்பட்டன. அதற்கு தகுந்தாற்போல் தேவைப்பாடுகள் குறைவாகவே இருந்தன. இதை Single Tier அல்லது Fat applications என்று கூறுவர்.

இரட்டை அடுக்கு செயலிகள் (two tier):


பின்பு Data entry, Storage இரண்டும் தனிவகைப்படுத்தப் பட்டது. இதில் தகவல் உள்ளீடு செய்பவைகள் Client என்றும் தகவலை சேமிப்பு செய்பவை Server என்றும் அழைக்கப்பட்டது. அப்போது TCP/IP, Novell போன்ற Networking (கணிணிகளின் வலைதளம்) நுட்பங்களினால் ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக கணிணிகளில் செயல் படுத்தப் பட்டது. இதற்கு பெரும்பாலும் Database (ms-access, sqlite) போன்ற SQL மொழி கொண்ட சாதனங்கள் (tools) தகவல் சேமிப்பிற்காகவும் Visual Basic, Power Builder, Developer / 2000 போன்ற்வைகள் பயன் படுத்தப் பட்டன.

பல அடுக்கு செயலிகள் (Multi tier):


பிற்பாடு பல விதமான தேவைகள் உண்டாயின. தகவல் சேமிப்புடன் SMS அனுப்புதல், e-Mail அனுப்புதல், அது மட்டுமல்லாமல் Hardware Interface (மற்றைய கருவிகளின் இணைப்பு) செய்து Camera, Auto Gate (turnstiles), EPABX (டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்) என அனைத்துக்கும் தனி தனி செயலிகள் ஒரு பெரிய செயலியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதை Multi tasking என்றும் கூறுவர். இவை அனைத்தையும் செய்து முடிக்க ஒரே மொழியை உபயோகப்படுத்த முடியாது. தகவல் சேமிப்பிற்காக Database மொழிகளும் (SQL, PL/SQL, T-SQL), தகவல் உள்ளீடு செயவ்தற்காக .Net, ASP, JSP, PHP போன்ற கணிணி மொழிகளும், செல்போன் மூலம் தகவல் உள்ளீடு செய்வதற்கு iOS, Android, HTML5 போன்ற மொழிகளும், தகவல் உள்ளீடு மற்றும் சேமிப்புக்கு இடைப்பட்ட encryption, security, compression போன்ற சேவைகளை செய்ய .Net, Ruby, Python, Java போன்ற மொழிகளும் தகவலை கோர்வையாக வெளிப்படுத்திக் காட்ட HTML, Crystal Reports, Oracle Reports போன்ற மொழிகளும் , மற்ற வகையான சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய c++ மொழிகளும் என பல விதமான கணிணி மொழிகள் இன்று தேவைப்பாட்டில் உள்ளது.

முடிவுரை:


ஆரம்ப கட்டத்தில் ஏதேனும் ஒரு மொழியை திறமையாக பயின்று பின்பு தேவைக்கேற்ப அடுத்த மொழிகளை ஒன்றன் பின் ஒன்றாக கற்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒரு முழு (Start to end) செயலி செய்ய குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று மொழிகளிலாவது திறமை அவசியம். அதனால் இன்றைய தலைமுறையினர் தன்னுடைய பயிற்சி திறனை முன்னேற்பாடாக கல்லூரி செல்லும் போது அல்லது அதற்கு முன்னான விடுமுறை காலத்திலாவது இந்த பயிற்சிகளை ஆரம்பித்து மேன்மை அடைய வேண்டும். கணிணி பயிற்சி நிறுவனங்களும் அதற்கேற்ப பாடத்திட்டங்களை (Syllabus) வகுத்து தலைமுறையை மேன்மை அடைய செய்ய வேண்டும்.