கைபேசி செயலிகள் (Mobile Apps)


முன்னுரை :-


கணிணிகளின் மூலம் அன்றாட தொழில், நடைமுறை தேவைகளுக்கு தனியாக செயலிகள்(APPLICATIONS) செய்வது கணிணி தயாக்கப்பட்ட காலத்தில் இருந்து செய்யப்பட்டு வருகிறது. கணிணி என்பது அதற்காகவே வடிவமைக்கப் பட்டது. ஆனால் கைபேசி, கைகடிகாரம், இசை ஒலிபரப்பி (ipod) போன்றவைக்ள் உருவாக்கபட்ட தேவைகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அவைகளும் இன்று உள்ள தொழில், மற்றும் வாழ்க்கை தேவைக்கான சில செயல்களை செய்ய துவங்கி உள்ளன. அந்த செயல்களை செய்ய பயன்படும் கருவிகளே கைபேசி செயலிகள்(Mobile Apps) எனப்படுகிறது. காரணங்கள் : -

காரணங்கள் : -


சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொழிற்சாலை முதலாளி தன்னுடைய தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி, வியாபாரம் போன்றவைகளை அறிய அவர் நிறுவன மேலாளரை அணுகி விபரம் அனுப்புமாறு கூறுவார். அல்லது அவரே நிறுவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்டவர்களிடமோ அல்லது கணிணி மூலமாகவோ விபரத்தை அறிய முடியும். ஆனால் இவைகள் அனைத்தும் நிறுவனத்தின் இணைய தளம் API (செயலிகள் தகவல் சேவை சர்வீஸ்கள்) மூலமாக அறிய முடியும். இந்த API கள் மூலமாக தேவைப்பட்ட தகவலை குறிப்பிட்ட நபர்களுக்கு அவர்கள் தேவைப்படும் போது கிடைக்குமாறு வழி செய்யலாம். இந்த API களை கிரகித்து தேவைப்பட்ட தகவலை வாங்கி, குறிப்பிடப்பட்ட நபர்களை உறுதி செய்து அவர்களுக்கு அறிவிக்க செயலிகள் உள்ளன. இந்த செயலிகள் INTERNET DATA (3G/4G) சேவைகளின் மூலம் செயல்பட்டு குறிப்பிடப்பட்ட நபருக்கு அவர் அதிக அலைச்சல் இல்லாமல் அவர் கைபேசி செயலி மூலமாக அவருக்கு கிடைக்க வழி வகுப்பதே MOBILE APPS ஆகும். அது மட்டுமல்லாமல் இரண்டு நபர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றங்கள் அவரவர்கள் இருக்கும் இடங்களில் இருந்தே செய்ய முடியும். இதற்கான செயலிகளை MESSAGING APPS என்று கூறுவர்.

பயன் பாடுகள் :-


இது முக்கியமாக ஒரு நபருக்க் தேவையான தகவல்கள் அவர்கள் கையில் கிடைப்பதால அந்த கணிணி செயலிகளில் (COMPUTER APPLICATIONS) இருந்து பிரித்து எடுத்து விடலாம். அதனால் கணிணி செயலியின் பணி சுமை குறையும். அது மட்டுமல்லாமல் அவரவர் இருக்கும் இடத்த்லேயே முடிவு எடுக்க தேவையான தகவல்கள் கிடைப்பதால் அவர்கள் குறைவான அலைச்சலுடன் அதிக வேலைகளை செய்ய முடிகிறது. அது மட்டுமல்லாமல் கைபேசி, கடிகாரம், இசைக்கருவி போன்றவைகளை அந்த தேவைகள் மட்டுமல்லாமல் வேறு தேவைகளுக்கும் உபயோகப் படுத்தப் படுகிறது. கைபேசி செயலி அசௌகரியங்கள் கைபேசி செயலிகள் உருவாக்குவதில் எந்த அளவுக்கு பயன் உண்டோ அந்த அளவிற்கு அதை உருவாக்க கஷ்டங்கள் உள்ளது. ஏனெனில் கைபேசி செயலிக்கு முடிவு எடுத்த தகவல்களை (COMPLETED INFORMATIONS) மட்டுமே அளிப்பது அதற்கு மிகவும் உபயோகமானது. கை பேசிகளின் திறன் பொதுவாக கணிணிகளின் திறனை விட குறைவாகவே இருக்கும். அதனால் அதற்கு முடிந்த வரையில் துரித நிலை தகவல்களை கொடுப்பது நல்லது. இல்லையானல் அதற்கு மொத்தமாக தகவல்களை கொடுத்து முடிவுகளை பிரசுரிக்க செய்வது அதன் செயல் பாட்டுத் திறனுக்கு அதிகமாகும். அது போல அதிக அளவு தகவல் பரிமாற்றம் இணைய தள சேவையின் செலவை அதிகரிக்கும். அது ம்ட்டுமல்லாமல் இணைய தளத்தில் API களை பிரசுரிக்க (HOST) செய்ய செலவினம் தனியாகும்.

செயலி மொழிகள்(APP LANGUAGES):-


MOBILE APP செயலிகள் செய்ய இன்று மூன்று முக்கியமான நிறுவனங்கள் கருவிகளை அளித்துள்ளன. அதில் முதலாவது IOS எனப்படும் APPLE COMPUTER நிறுவனத்தின் கருவியாகும். இது IPHONE, IPAD,IPOD, IWATCH முதலான கருவிகளுக்கு மட்டும் பொருந்தும். இதை STEVE JOBBS என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அறிமுகப்படுத்தி MOBILE APPS ன் பிதாமகர் என்னும் நிலைக்கு உயர்த்தப் பட்டவர். இதில் திறன் மேம்பட SWIFT, OBJECTIVE-C எனும் இரண்டு மொழிகள் உள்ளன. இதில் SWIFT மொழி கணிணி வரலாற்றிலேயே அதிக வேகமாக பரவிய மொழி என உறுத்ப் படுத்தப் பட்டுள்ளது. இதனை பயில APPLE நிறுவனம் PLAYGROUND எனும் கருவியை (TOOL) தந்து உள்ளது. இதன் மூலம் மொழியின் அடிப்படை அம்சங்கள் (CORE), தகவல் உள்ளீடு திரைகள் (SCREENS) , தகவல் சேமிப்பு சர்வீஸ்கள் உள்வாங்குதல் (APIs INTEGRATION), ஆகியவற்றை தனிதனியாக பயில உதவி புரிகிறது. இதை APPLE நிறுவனத்தின் பிரபலமான MAC கம்ப்யூட்டர்களில் மட்டுமே உபயோகப் படுத்த முடியும். SWIFT மொழியின் அசுர வளர்ச்சி இதை மற்ற நிறுவனங்களின் (GOOGLE ANDROID, MICROSOFT WINPHONE) செயலிகளின் உருவாக்க மொழியாக (DEVELOPMENT LANGUAGE TOOL) உபயோகப்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் உருவாக்கப்படும் செயலிகள் (APPS) APPLE நிறுவனத்தின் APP STORE ல் ஏற்றப்பட்டு மற்ற IPHONE, IPAD, IWATCH, IPOD கருவிகளில் பதிவிறக்கம் செய்யப் படுகிறது. IOS க்கு அடுத்த நிலையில் உள்ளது ANDROID GOOD கருவியாகும். இது GOOGLE நிறுவனத்தின்JAVA மொழியை அடிப்படையாக கொண்டது ஆகும். இதில் திறன் மேம்பட ANDROID STUDIO எனும் TOOL ஐ GOOGLE நிறுவனம் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல் GOOGLE நிறுவனம் ஏராளமான பயிற்சி வீடியோக்கள் பதிப்பீடுகளை வெளியிட்டுள்ளன. இதில் செய்யப்படும் கருவிகள் ANDROID MARKET, PLAY STORE எனும் இணைய தளத்தில் ஏற்றப்பட்டு மற்ற ANDROID PHONE, TABLET கருவிகளுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. IOS , ANDROID க்கு அடுத்த நிலையில் உள்ளது WINDOWS PHONE கருவியாகும். இது மற்றொரு பிரபலமான MICROSOFT நிறுவனத்தின் கருவி யாகும். இதில் திறன் மேம்பட .NET எனும் மொழியை அடிப்படையாகக் கொண்ட VISUAL STUDIO எனும் கருவியை MICROSOFT நிறுவனம் அளித்துள்ளது. இதிலும் பயிற்சி திறனை வளர்க்க ஏராளமான வீடியோக்கள், பயிற்சி பதிப்புகள், புத்தகங்கள் வெளியிடப் பட்டு உள்ளது.

முடிவுரை :-


இது மட்டுமல்லாமல் பல சிறு மொழிகள் வழக்கில் உள்ளன. இவைகள் பொதுவாக ANDROID PHONE களின் மாற்று கம்பெனிகளின் தயாரிப்புகளாகவே உள்ளன. இது போல் MOBILE APPS திறன் மேம்பட விரும்புவோர் தனக்கு பிடித்த மொழியை தேர்ந்தெடுத்து அதில் திறனை மேம்படுத்தி MOBILE APP DESIGNER, MOBILE DEVELOPER போன்று எதிர்கால துறைகளில் ஜொலிக்க பயிற்சி மையங்கள் உதவ வேண்டும்.